Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    RISHABAM Guru Peyarchi Palan

ரிஷப ராசி அன்பர்களே, இதுவரையில் உங்கள் ராசிக்கு பதினோராம் இடமான (லாப ஸ்தானத்தில்) சஞ்சரித்து கொண்டிருந்த குரு பகவான், அங்கிருந்து உங்கள் பனிரெண்டாமிடமும் விரைய ஸ்தானமான மேஷ ராசிக்கு 22-04-2023 அன்று மாறுகிறார். (12-ம் இடம் விரைவு ஸ்தானம் என்பதால் அடுத்த வரும் குரு பெயர்ச்சி வரை கவனமாக இருப்பது நல்லது). பண விஷயங்களில் ஏற்ற இறக்கமான நிலை காணப்படும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. அடுத்தவருக்கு வாக்கு கொடுக்கும் விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்கவும். உங்கள் ராசிக்கு 4 ம் வீட்டை குரு பார்ப்பதால் அதன் அடிப்படையில் பல யோக பலன்கள் உண்டு. ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. நோய்கள் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷங்கள் இருந்தாலும் நீங்கும். உங்கள் ராசிக்கு 6ம் பாவத்தை குரு பார்ப்பதால் கடன் சுமை குறையும். நோய் நொடி நீங்கும். தொழில் விருத்தி உண்டாகும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு 8ம் பாவத்தை குரு பார்ப்பாதல் வழக்குகளில் சாதகமான பலன்கள் கிட்டும். மன பயம் நீங்கும். எதிர்பாராத வகையில் பண வரவு வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். மன சங்கடங்கள் விலகும். பண விஷயத்தில் கூடுமானவரை யாரையும் நம்ப வேண்டாம். பெற்றோர்கள் வழியில் தன லாபம் உண்டு. புது விஷயங்கள் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். ராசியில் சந்திரன் இருப்பதால் உறவினர்களால் சச்சரவுகள் ஏற்ப்படும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். குடும்பத்தில் எதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம், அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். குடும்ப பெரியோர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லவும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டிருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகி வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். உங்களை சுற்றி இருப்பவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவர். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நல்லபடியாக அனைத்து விஷயங்களையும் தாமதமின்றி செய்து முடிப்பது நல்லது. சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தினருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஆன்மீக விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும். நீண்டதொரு ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிய சூழல் வரும். வாகன யோகம் கைகூடி வரும். எதிர்பார்த்த காரியம் தடையின்றி முடியும். சுற்றி இருப்பவர்களிடம் ஒற்றுமை கூடும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். பழைய கடன்களால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வர வேண்டிய பெரிய தொகை கைக்கு வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்ளுவதால் விரையம் ஏற்படும். பால்ய நண்பர்களுடன் சிறிய மனஸ்தாபம் வரும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். ஒரே நேரத்தில் இரண்டு பல வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். வெளியூர், வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. இந்த குரு பெயர்ச்சியால் வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்யோகத்தில் கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழில், வியாபாரத்தில் ஒரு சில சிரமங்கள் இருக்கும். இந்த குரு பெயர்ச்சியில் குறைவான பலன்களையே எதிர்பார்க்க முடியும்.

பரிகாரம் : ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.

( For Rishabam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Rishabam (Taurus) [Stars: Kirthigai 2,3,4 Rohini 1,2,3,4 Mirgasersham 1,2 quarters]

Rishaba rasi people always blessings and tend to be down to earth in nature. Very positive thinking and will try to compete in many fields to become number one or winning person. Practical thinking, mind balance, stability, truth, generosity and humanity are the best qualities. They are generally good in speech, art, cinema, music, mathematics, technology and other related areas. Sometimes they go down if they are not winning or achieving results. In general, people under this rasi must be motivated towards their goals by others. They look handsome and good looking to attract others with kind and tricky words. If any problem to be solved, then think twice before dealing the same by finding the best way to overcome such situations as the rasi owner is Venus. Do not care about annoyance if any to move ahead of the situations in winning competitions. Speculation brings good gain in some areas by luck and grace.

Family and core values are maintained at the most and wants to live luxury life though the financial is reasonable. Business or work; the performance always goes up and help others once they reach their goals. They can teach well and may become good professor sometimes. If maintains good health; people under this rasi may live 80 plus years. New inventions are achieved by these people many a time. Travel brings new opportunities and profits. Good family and children automatically blessed for these people with relatives support. Individual performers receives award in one or many fields for greatest achievements. If these people maintain emotional balance; no one can win them in any situation as they technically hold them back which will make them win the whole drama. They are great word of mouth people to market anything easily. Lucky colours are white and green, stones are diamond and emerald, and numbers are 5 & 8.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.